Main Menu

What’s New?

Connect With Us

உலகின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா: விளாதிமிர் பூட்டின் அதிகாரப்பூர்வ அறிவுப்பு!

Read Carefully

SHARES

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா.இதற்கு இது நாள் வரை மருந்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை,ஆனால் தற்போது கோவிட்-19 தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.இதனை அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் பூட்டின் அறிவித்தார்.உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகள் அதிகரித்துவருகிறது.அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக ரஷ்யா உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை முதல் நாடாக ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.இதனை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி சோதனைக்காக பொதுமக்களுக்கு இன்று [11.8.2020] முதல் தடுப்பூசி போடப்படுகிறது.மருத்துவ வல்லுநர்கள் மற்றும் முதியவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் இதே தடுப்பூசியை முதலில் போடப்பட்டது.இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் அக்டோபரில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஏற்கனவே ரஷ்யா கூறியிருந்தது.இந்த தடுப்பூசி பலன் அளிக்கவே, கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளோம்.என ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் அறிவித்துள்ளார்.

Vladimir Putin

உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது சொந்த மகளுக்கே புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும்,விளாதிமிர் பூட்டின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறுகையில்,”இந்த தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது”,நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது’,என்றார்.இந்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் விளாதிமிர் பூட்டின்.மேலும் இது”உலகிற்கான மிக முக்கியமான படி“என்றும் விவரித்தார்

Top