தங்கள் மகன்களை ஒழுங்குப்படுத்துங்கள்/ஆண்ட்ரியா காட்டம்.

andreo

தமிழ் சினிமாவில் கதைகளுக்கென முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் ஹீரோயின்கள் மிகவும் குறைவு.அந்த வகையில் கதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா,பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.அந்த பெண் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.இதுபோல் அடுத்து அந்த மாநிலத்திலேயே 22 வயது பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.இந்த பாலியல் வன்கொடுமைகளை நடிகை ஆண்ட்ரியா கண்டித்துள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள்  பொறுப்பை ஏற்றுக்கொள்ள்ளும் நிலை வந்தால்” ஒழிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழியப்போவதில்லை.பெண் மீதான தாக்குதலுக்கும்,துன்புறுத்தலுக்கும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அவள் மீது எந்த தவறு சொல்ல முடியாது.இந்திய தாய்மார்கள் தங்கள் மகன்களை ஒழுங்குப்படுத்துங்கள்.பெண்களை மதிப்பதற்கு அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் உங்கள் மகனை சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறுங்கள்.அதுவே பாதுகாப்பு என்றும் அறிவுறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top