விஜய்சேதுபதி தமிழ் திரைத்துறையில் பிஸியாக இருக்கும் ஹீரோக்களில் ஒருவர். வருடத்திற்கு நான்கு முதல் ஏழு படங்கள் வரை நடித்து முடித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கின் போது பாதிக்கப்பட்டது திரைத்துறை, விஜய்சேதுபதிக்கு இந்த வருடம் படப்பிடிப்புகள் பாதித்தாலும் கைவசம் நிறைய பங்களை வைத்துள்ளார். நடித்து முடித்த படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.
விஜய்சேதுபதியின் படங்கள் :
‘மாஸ்டர்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘கடைசி விவசாயி’, ‘மாமனிதன்’, போன்ற படங்கள் வெளிவர இருக்கின்றன. சமீபத்தில் OTT தளத்தில் வெளியான க/பெ. ரணசிங்கம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டுமின்றி ஹிந்தியில் ‘லால் சிங் சத்தா’ மற்றும் தெலுங்கில் ‘உப்பேனா’ படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த வரிசையில், இயக்குனர் S.P.ஜனநாதன் இயக்கத்தில் “லாபம்” படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இயக்குனர் S.P.ஜனநாதன் முன்னதாக நடிகர் ஷியாமை வைத்து “இயற்கை”, ஜீவா மற்றும் நயன்தாராவை வைத்து “ஈ”, ஜெயம் ரவி நடிப்பில் “பேராண்மை” மற்றும் விஜய்சேதுபதியை வைத்து “பொறம்போக்கு என்ற பொதுவுடைமை” போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது இயக்கி வரும் ‘லாபம்’ படத்தை பற்றி அவர் பேசியுள்ளார். அதில் லாபம் படமானது மக்கள் நாளைடைவில் மறந்து போன ஒரு உண்மையை பற்றி கூறும் படமாக உருவாகிறது. அனைத்து தொழிற்சாலைகளுக்கும், மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் செழிப்பான கிராமமாக இருக்கிறது அந்த கிராமம். அப்போது அங்கு வரும் பக்கிரி ( விஜய்சேதுபதி) எப்படி அந்த கிராமத்துடன் ஒத்து போகிறான், அவர்களுடன் ஒன்றாக வாழ்கிறான். பின்பு அவர்களின் எதிர்காலத்துக்காக எப்படி போராடுகிறான் என்பது கதை.

அதன் விளைவுகள் விபரீதமாக முடிகிறதா என்பது இறுதிக்கட்டம் என்கிறார். இப்படத்தில் கிளாரா (ஸ்ருதி ஹாசன்), தற்பெருமை பேசும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். சாய் தன்ஷிகா, ஜெகபதி பாபுவுக்கு வலது கையாக நடித்திருக்கிறார்.
நான் நடிகர்களுக்கு கதை எழுதுவதில்லை, எழுதிவிட்டு அதற்கு நாயகனை தேடுகிறேன் என்கிறார். நான் சொல்லவரும் விஷயங்களை மிக சரியாக மக்களிடம் சென்று சேர்க்க ஒரு நாயகனை தேடினேன். அதற்கு விஜய்சேதுபதி சரியாக இருப்பார் என தோன்றியது.
சமூகம் சார்ந்த விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காக கதை எழுதுவதில்லை. என் வாழ்வில் நான் பார்த்து அல்லது மனதை பாதிக்கும் விஷயங்களை மட்டுமே எழுதுகிறேன் என்றார் இயக்குனர் S.P.ஜனநாதன்.
மேலும், தலைப்பு “லாபம்”பற்றி அவர் கூறுகையில், லாபம் என்ற சொல்லே கிடையாது என்கிறார் கார்ல் மர்க்ஸ். ஒரு விவசாயி விளைவித்து கஷ்டப்பட்டு பொருட்களை உற்பத்தி செய்கிறான். அதில் அவனுக்கு நியாயமாக சென்று அடைய வேண்டியதே லாபம் என்கிறார் இயக்குனர். உலகில் உற்பத்தியில் முதன்மையாக இருப்பவன் “விவசாயி” என்கிறார் S.P.ஜனநாதன்.
படத்தின் படப்பிடிப்பு கடைசிகட்டத்தில் உள்ளது, விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அந்த பெட்டியில் அவர் கூறியிருக்கிறார்.