Main Menu

What’s New?

Connect With Us

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி!கொண்டாட்டங்களும்,வரலாறுகளும்!!

God krishna
Read Carefully

SHARES

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள்: கிருஷ்ண ஜெயந்தி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவை சின்ன உருவம் கொண்ட கிருஷ்ணனின் உருவம்தான்.அன்று எந்த குழந்தைகளை பார்த்தாலும் கிருஷ்ணனின் உருவகமாகவே தோன்றும்.அதன் பிறகு வெண்ணெய்,மயில் இறகுகள்,புல்லாங்குழல்,ஆகியவை நம் நினைவுக்கு வரும்.வீட்டில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைக்கு கிருஷ்ணனின் வேடமிட்டு அழகு பார்ப்பார்கள்.எங்குலாம் கிருஷ்ணர் கோவில்கள் இருக்கிறதோ அங்குலாம் விக்ஷேச புஜைகள் நடத்தி,கொண்டாடுவார்கள்.வீட்டில் சீடை,முறுக்கு,பாயாசம்,போன்ற பட்ஷனம் செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்தப் பின் அதனை சாப்பிட்டு மகிழ்வார்கள்.சரி… ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?அதன் வரலாறுகள் என்ன என்பதை பற்றி அறிந்தப் பின் மீண்டும் நாம் கொண்டாட்டங்களை பற்றி அறிவோம்.

Baby Krishna

வரலாறுகள்:
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி),ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்ட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருஷ்ணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மஹாராஷ்டாவில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை உ டைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

Dahi handi festival before corona

தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர். தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

Guruvayur temple

கிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிருந்து பூஜையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பிரம்மாண்டம்:
உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோவிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோவிலில் உள்ளது.இங்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

Udupi Sri Krishna Temple

அந்தக்காலம் Vs இந்த காலம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி:
அந்த காலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வரும் ஒரு வாரம் முன்பே மக்கள் பட்ஷனம் செய்ய பொருட்களை வாங்கி விடுவார்கள்.கடைத்தெருவில் கூட்டம் அலைமோதும்.ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் சீக்ரம் எழுந்து குளித்து பட்ஷனங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.அன்று இரவு வீட்டில் உள்ள கிருஷ்ணர் விக்ரகங்களுக்கோ,அல்லது புகைப்படத்துக்கோ பூஜைகளை செய்து,இரவில் தான் செய்த சமையலையும்,பட்ஷனத்தையும் உண்பர்.காலப்போக்கில் இவையெல்லாம் மாற்றிவிட்டன.தற்போது கொரோனா வேற,ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட முடியாத சூழல்.பரவாயில்லை இருக்கட்டும்,கிருஷ்ணரை மனதார பிராத்தனை செய்தலே போதும் கிருஷ்ணர் அருள் செய்வார்.இவ்வருடம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அணைவருக்கும் கிருஷ்ணர் அருள் செய்ய ப்ராத்திக்கிறது Chennaiyil.com அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

Top