Main Menu

What’s New?

Connect With Us

“ராம்விலாஸ் பஸ்வான்” மறைந்தார்/மோடி புகழாரம்!

Read Carefully

SHARES

டெல்லி தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மத்திய அமைச்சரும்,லோக் ஜன சக்தி கட்சித் தலைவருமான “ராம்விலாஸ் பஸ்வான்” நேற்றிரவு இறந்தார்.அவருக்கு வயது 74.1946ல் ஜூலை 5ஆம் தேதி பீகாரில் பிறந்த ராம்விலாஸ்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில்,லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பஸ்வான் இடம் பெற்றிருந்தார்.அவர்,நுகர்வோர் விவகாரம்,உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.சமீப காலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு,டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Ram_Vilas_Paswan

3 நாட்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில்,சிகிக்சை பலனின்றி நேற்றிரவு அவர் தீடீரென மரணமடைந்தார்.இத்தகவலை,அவருடைய மகனும் லோக் ஜன சக்தி கட்சியின் பீகார் மாநில தலைவருமான சிராக் பஸ்வான் உறுதிப்படுத்தினார்.அவர் நேற்றிரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”அப்பா,இப்போது நீங்கள் இந்த உலகத்தில் இல்லை.நீங்கள் எங்கே இருந்தாலும்,எப்போதும் எங்களுடன் இருப்பீர்கள்.நாங்கள் உங்களை அதிகமாக தவற விடுகிறோம் அப்பா,என்று உருக்கமாக கூறியுள்ளார்.பஸ்வானின் மறைவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்,பிரதமர் மோடி,காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இவர் 8 முறை மக்களவை எம்.பி.யாகவும்,தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவும், இருந்து வந்தார்.இவருக்கு ரீனா பஸ்வான் என்ற மனைவியும்,சிராக் பஸ்வான் என்ற மகனும்,ஆஷா,உஷா என்ற 2 மகள்களும் உள்ளனர்.தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த “ராம்விலாஸ் பஸ்வான்” அரசியல் களத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்துள்ளார்.பீகாரில் பலம் வாய்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவு தலைவராக விளங்கியவர்.இவரின் மறைவின் செய்தியினை கேட்ட பிரதமர் மோடி.

 

தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,நான் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளேன்.நமது நாட்டில் மீண்டும் நிரப்பப்பட முடியாத மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.பஸ்வானின் மரணம்,எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய இழப்பாகும்.நான் எனது சிறந்த நண்பரை,மதிப்புமிக்க சக நிர்வாகியை,ஒவ்வொரு ஏழையும் கவுரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என விருப்பப்பட்ட ஒருவரை இழந்துள்ளேன்,என்று கூறியுள்ளார்.

Top