Main Menu

What’s New?

Connect With Us

விஜயதசமியில் ரஜினி கட்சி உதயமாவது உறுதி?

Read Carefully

SHARES

தமிழக சட்டசபை தேர்தல் வர சரியாக ஆறு மாத காலமே உள்ளது.கொரோனா காரணமாக தமிழக தேர்தல் சற்று மந்தமாகவே இருக்கிறது.திமுக,அதிமுக போன்ற பெருங்கட்சிகள் மெல்ல மெல்ல தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.சிறிய கட்சிகள் கூட சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டன.ஆனால் தமிழக மக்களும்,ரஜினி ரசிகர்களும் ஆவளோடு ரஜினியின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.இந்த காத்திருப்பு இன்று,நேற்று அல்ல கடந்த 30 ஆண்டுக் காலமாகவே இருக்கிறது.ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றதில் இருந்தே அவரது ரசிகர்கள் அரசியல் அழைப்பெடுத்தனர்.

ஆனால் ரஜினிக்கு இதில் துளிக்கூட விருப்பமில்லை.சோ.ராமஸ்வாமியின் அறிவுரைப்படி 1992ல் ரஜினி,திமுக,தமாகா,காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவை தெரிவித்தார்.அக்கூட்டணி வெற்றிப்பெற்றது.இதனால் மீண்டும் ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்தனர்.இதை கண்டுக்காது ரஜினி தொடர்ந்து படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.இந்நிலையில் 2018ல் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்,நான் அரசியலுக்கு வருவது உறுதி 234 தொகுதிகளிலும் நிற்ப்பேன்,என அறிவித்தார்.

இதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.ஆனால் கட்சியின் பெயர்,கொடி,கொள்கை,போன்றவற்றை அறிவிக்காமல் இருந்தார்.கடந்த மார்ச் மாதம் ஹோட்டல் லீலா பேலஸில்,புரட்சி வரவேண்டும்,புரட்சி அலை வீச வேண்டும்,அதனை நான் உணர வேண்டும்,அப்போது நான் கட்சி ஆரம்பிப்பேன்,என கூறினார்.தற்போது தேர்தல் நேருங்கி வரும் சூழலில் ரஜினி கட்சியினை ஆரம்பிப்பாரா? என்கின்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது.கட்சி ஆரம்பிக்க,தேர்தலுக்கு முன் குறைந்தது ஆறு மாத காலமாவது இருக்க வேண்டும்.ஆகையால் அடுத்த மாதத்திற்குள் ரஜினி கட்சியினை தொடங்கி இருக்க வேண்டும்.

வருகின்ற 25ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு ரஜினி கட்சி ஆரம்பிப்பதா பரபரப்பான செய்தி வந்துள்ளது.இத்தகவலை உறுதி செய்ய சம்மந்தப்பட்டவர்களை தொடர்ப்புக்கொண்ட போது,“சார் யாருக்கும் தெரியாது”,தலைவருக்கு மட்டும்தான் தெரியும்,என்று பதில் வந்தது.எது எப்படியோ….!“இப்பஇல்லைனா…எப்போவும் இல்லை…”,என்கின்ற வசனத்தை ரஜினிக்கு நினைவுப்படுத்துகிறோம்…!

Top