Main Menu

What’s New?

WHERE DO WE STAND?

13 June, 2020

Connect With Us

அரசால் திறக்காமல் இருக்க முடியவில்லை:

tasmac shops
Read Carefully

SHARES

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வருகிறது,இந்தியாவும் இதற்க்கு விதிவிலக்கல்ல.இதனால் கடந்த இரு மாதங்களுக்கும்மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.ஆகையால் டாஸ்மாக்கும் மூடப்பட்டுள்ளது.கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மது பாடில்கள் குடிமகன் கையில் கிடைக்காமல் இருந்தது.குடுபத்திலும் சண்டைகள்,சச்சறவுகள்,இல்லாமல் குடும்பம் நிம்மதியாக இருந்தது.இதனை குடும்ப பெண்களே டிவிகளிலும்,பத்திரிக்கைகளிலும் பேட்டி கொடுத்தார்கள்.”மதுவிளக்கை அமல்படுத்தமுடியாது,மீறி செய்தால் குடிமகன்கள் மன ரீதியாகவும்,உடல் ரீதியாகவும்,பாதிப்படைவாா்கள்.என்றும்,மதுவிளக்கை அமல்ப்படுத்தினால் கள்ளச்சாராயம் ஊடுருவி விடும்”,என்றெல்லாம் அரசு இத்துனை ஆண்டுக்காலம் கூறி வந்துள்ளது.ஆனால் இதை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது இந்த கொரோனா ஊரடங்கு.ஆம்!இப்போது பல குடிமகன்கள் மனம் மாற முன்வந்துள்ளனர்.பல நபர்கள் குடியை விட்டுவிட்டனர்.அரசாங்கத்திற்கு டாஸ்மார்க் மூலமாக ஆண்டுக்கு ரூபாய் 21,641கோடி வருமானம் வருகிறது.இத்தகைய வருமானம் வரும் இடத்தில் மதுவிளக்கு சாதியமில்லை என்று அரசு மற்றும் வள்ளுனர்கள் கூறுவதை ஏற்க்க முடியாது.காரணம் அரசுக்கு 21,641கோடி என்பது பத்து சதவீதம் கூட இல்லை என்பதே நிதசனமான உண்மை.ஒவ்வொறு துறைகளிலும் பல லட்சகோடி வருவாய் வருகிறது.அப்படி இருக்கும் சூூழலில் மதுவிளக்கை தைரியமாக அமல்ப்படுத்தலாம்.காலில் முள் குத்தியதை வலியில்லாமல் எடுக்க முடியாது.அது போல் மதுவிளக்கை அமல்ப்படுத்தியவுடன் குடிமகன்கள் மன,உடல் ரீதியாக அவதிப்படுவாா்கள்,ஆனால் அது மிக குறைந்த சதவீதமே….மதுவிளக்கை அமல்ப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று அரசு சொல்வதை என்ன வென்று கூறுவது? ஒரு அரசு இப்படி கூறலாமா? கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதே அரசின் கடமை!அரசு இப்படி கூறுவதை யவராலும் ஏற்க்க முடியாது.ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் விரட்டுகிறார்கள்.அதை போல் கள்ளச்சாராயம் காச்சுபவர்களையும் ட்ரோன் கேமரா மூலம் விரட்டலாமே.கள்ளச்சாராயம் காச்சுபவர்களின் மீது குண்டாஸ் போன்ற கடும் சட்டம் கொண்டு வந்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும்.”சார் நான் 40 நாட்களா குடிக்காம இருந்தேன்.மது கடைகளும் மூடி இருந்தது,ஆனால் தற்போது மது கடைகள் திறந்து இருப்பதால் என்னால் குடிக்காமல் இருக்க முடியவில்லை”,என்றே அணைத்து குடிமகன்களும் புலம்பிவருகின்றார்கள்.உண்மை தான்!….டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்தால் அவர்களே மீண்டு வந்துவிடுவாா்கள்.ஆகவே மதுவிளக்கை உடனடியாக அரசு அமல்ப்படுத்தலாம்,அல்லது குறைந்தது ஊரடங்கு முடியும் வரையிலாவது டாஸ்மாக்கடைகளை திறக்காமல் இருக்கலாம்.மக்கள் குடிக்காமல் இருப்பார்கள்,அரசால் திறக்காமல் இருக்க முடியாது என்பதே நிதா்சனமான உண்மை….

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top