Main Menu

What’s New?

Connect With Us

அஜித்தின் சம்பளமும்,சொத்தும்,இம்புட்டு கோடியா?

Read Carefully

SHARES

உனக்கு என்னையா வந்தது?அவரு நடிக்குறாரு சம்பளம் வாங்குறாரு,உனக்கு என்ன? என்று இந்த டைட்டிலை பார்த்தவுடன் அஜித் ரசிகர்கள் கேட்கலாம்.அஜித் இவ்ளோ சம்பளம் வாங்குகிறார் என்று வம்பு இழுக்க அல்ல. ஜஸ்ட் அஜித்தின் சம்பளத்தை பற்றி தெரிந்துக் கொள்ளவே.1971ல் பிறந்த அஜித்குமார், 1986ல் உயர்நிலைக்கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை நிறுத்திவிட்டார்.நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களில் நடிக்க தொடங்கினார்.அதன் பின்னர் 1992ல் “பிரேம புத்தகம்” என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.1993ல் “அமராவதி” என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை என்றாலும்,1994ல் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.1995ல் இயக்குனர் வசந்த்.எஸ்.சாய் இயக்கத்தில் “ஆசை“என்கின்ற திரைப்படத்தில் நடித்தார் இப்படம் சூப்பர் ஹிட்டானது.அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் என்று கூட சொல்லலாம்.

அதன் பின்னர் “காதல் மன்னன்“,”அவள் வருவாளா“,”வாலி“,”அமர்க்களம்“,”தீனா“,”மங்காத்தா“,”என்னை அறிந்தால்“,”விசுவாசம்“,”நேர்கொண்ட பார்வை“,என நடித்து தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.அஜித்தை பற்றி நமக்கு தெரியாத விஷயங்களே கிடையாது.

ஆனால் அவரின் சம்பளமும்,சொத்து மதிப்பும்,எவ்வளவு இருக்கும்?என பலரது கேள்வியாக உள்ளது.அதை பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒரு படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் 40 கோடியாம்.மேலும் அஜித் வைத்திருக்கும் லாம்போகினி மற்றும் பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார்களின் விலை மதிப்பு சுமார் 5 கோடி இருக்குமாம்.மேலும் ஏப்ரிலியா கபோனார்ட் பைக் மற்றும் பி.எம்.டபிள்யூ கே 1300 எஸ் பைக் வைத்துள்ளாராம்.இவரின் வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 15 கோடியில் இருந்து 20 கோடியாம்.அஜித்தின் முழு சொத்து மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் இருக்குமாம்.இதுயெல்லாம் ஒருபுறம் இருக்க அஜித் பலருக்கும் பல உதவிகளை சத்தம் போடாமல் செய்து வருகிறார்.எனினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

Top