Main Menu

What’s New?

Connect With Us

குஷ்பு பா.ஜ.வில் இணைந்தார்|ஏன் என்ன காரணம்?

Read Carefully

SHARES

 

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்,நடிகையுமான குஷ்பு,அக்கட்சியில் இருந்து விலகி,பா.ஜ.க தலைமை அலுவலகத்தில்,பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பு பா.ஜ.கவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.1970ல் மும்பையில் பிறந்த குஷ்பு,1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.2010ல் திமுகவில் நட்சத்திர பேச்சாளராக,அரசியல் பிரவேசம் செய்த குஷ்பு,முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

இதனால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.அதன் பின்னர் திமுக கொடுத்த நெருக்கடி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார்;தரப்படவில்லை.கடந்த 2009ல் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று,காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி.தலைவர் பதவியை சச்சின் பைலட்,ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்ற இளைய தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்துக்கும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும் ஆதரித்தார்.இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா போன்றவர்கள் குஷ்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.தன் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்ததால்,காங்கிரஸ் மீது குஷ்பு அதிருப்தியில் இருந்தார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற பேச்சும்,கட்சியில் அடிப்பட்டது.இதனை அடுத்து காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைய நினைத்தார்.தன் விருப்பத்தை தமிழக பா.ஜ,க தலைவர் முருகனிடம் குஷ்பு கூற,தலைமையிடம் பேசி சம்மதம் வாங்கினார்.இதனையேடுத்து டெல்லிக்கு சென்ற குஷ்பு,பா.ஜ.க.தலைமை அலுவலகத்தில் அதன் தலைமை தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பா.ஜகவில் இணைந்தார்,குஷ்பு.முன்னதாக சால்வை அணிவித்து,பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழக பாஜக தலைவர் முருகன்.”பா.ஜ.கவில் கடந்த ஆறு மாதங்களாக மிக பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.அணைத்து தரப்பு மக்களும் பா.ஜ.வில் இணைந்து வருகின்றன.காரணம் நேர்மையான மோடியின் ஆட்சியை தமிழகத்திலும் வரவேண்டும் என மக்கள் நினைத்து வருகின்றன.அந்த வகையில் குஷ்பு பா.ஜ.வில் இணைந்தது மகிழ்ச்சியே”என்று தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் பேசினார்.குஷ்பு பேசுகையில்,மோடி சரியான பாதையில் இந்தியாவை முன்னெடுத்து செல்கிறார்.பா.ஜ.கவில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.இதனை நான் முன்னாடியே செய்திருக்க வேண்டும் என குஷ்பு கூறினார்.

Top